பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மீது துப்பாக்கி சூடு

வாணி 2018-05-07 09:51:24
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் அஹான் இக்பால் 6ஆம் நாள் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் கலந்து கொண்ட போது துப்பாக்கிச் சூட்டுக்குள்ளானார். தாக்குதல் நடத்திய உள்ளூரைச் சேர்ந்த 22 வயதான இளைஞர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் தலைமை அமைச்சர் அபாஸி இச்சம்வபத்தைக் கடுமையாகக் கண்டித்து, தாக்குதலுக்குக் காரணமானவர்களைக் கண்டுபிடித்து தண்டனை விதிக்க வேண்டும் என்று காவற்துறைக்கு அவர் கட்டளையிட்டார். இந்நிலையில் அரசியல்வாதிகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு வலுப்படுத்த வேண்டும் என்று அந்நாட்டின் பல்வேறு கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்