கொல்கத்தா: சீனப் பல்கலைக்கழகங்களில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான கண்காட்சி

தேன்மொழி 2018-05-08 09:55:18
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

கொல்கத்தா: சீனப் பல்கலைக்கழகங்களில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான கண்காட்சி

சீனத் துணைத் தூதர் மா ட்சென் வூ

கொல்கத்தாவிலுள்ள சீனத் துணைநிலை தூதரகம், கொல்கத்தாவிலுள்ள சீன மொழிப் பள்ளியின் ஒத்துழைப்புடன், சீனப் பல்கலைக்கழகங்களின் கல்விச் சாதனை கண்காட்சி மற்றும் 2018ஆம் ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை நடவடிக்கை ஆகியவற்றை, மே 10, 11 ஆகிய இரு நாட்களில் இம்மாநகரில் நடத்தவுள்ளது என்று சீனத் துணைத் தூதர் மா ட்சென் வூ 7-ஆம் நாள் தெரிவித்தார். இக்கண்காட்சி பற்றி, பிடிஐ, டைம்ஸ் ஆஃப் இந்தியா, தி டெலிகிராஃப் உள்ளிட்ட இந்திய ஊடகங்களுக்கு அவர் அறிமுகம் செய்தார்.

அப்போது, இந்திய மாணவர்களுக்கென சீனப் பல்கலைக்கழகங்களின் மேம்பாடுகளை எடுத்துரைத்ததுடன், தற்போது, 18ஆயிரத்துக்கும் அதிகமான இந்திய மாணவர்கள் சீனாவில் கல்வி பயின்று வருவதாகவும் மா ட்சென் வூ தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்