இலங்கையில் வெளிநாட்டுப் பயணிகள் வரியைத் திரும்பப் பெறலாம்

2018-05-09 14:32:04
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

வரும் ஜுன் திங்கள் முதல் நாள் தொட்டு, வெளிநாட்டுப் பயணிகள் இலங்கையை விட்டுச் செல்லும் போது 15 விழுக்காடு வரியைத் திரும்பப் பெற விண்ணப்பம் செய்யலாம் என்று இலங்கை சுங்க வரி வாரியம் தெரிவித்துள்ளது.

டெய்லி நியூஸ் வெளியிட்ட செய்தியின்படி வெளிநாட்டுப் பயணிகள் இலங்கையில் பதிவு செய்யப்பட்ட கடைகளில் ஆடை, மின்னணு பொருட்கள் ஆகியவற்றை வாங்கினால், அதிகாரப்பூர்வ ரசீதுகளைக் கொண்டு பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் வரியைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.

பொருளாதார வளர்ச்சியை முன்னேற்ற, வெளிநாட்டுப் பயணிகளை ஈர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக என்று இலங்கை சுங்க வரி வாரியத்தின் பொறுப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்