பிளிப்கார்ட்டின் 77 விழுக்காட்டு பங்குகளை வாங்கியது அமெரிக்காவின் வால்மார்ட்

வாணி 2018-05-10 10:15:26
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இந்தியாவின் பெரிய இணையவழி வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட்டின் சுமார் 77 விழுக்காட்டு பங்குகளை 1600 கோடி அமெரிக்க டாலர் மூலம் வாங்கியுள்ளதாக அமெரிக்க சில்லறை நிறுவனமான வால்மார்ட் புதன்கிழமை அறிவித்தது.

இந்தியாவில் வால்மார்ட்டின் இணையவழி சில்லறை விற்பனை சந்தையை விரிவாக்குவது இதன் நோக்கமாகும் என்றும், பிளிப்கார்ட் பங்கு பத்திரச் சந்தையில் நுழைவதற்கு இது உதவி செய்யும் என்றும் வால்மார்ட் கூறியுள்ளது.

இந்தியாவில் 2007ஆம் ஆண்டு தொடங்கி வால்மார்ட் பல்பொருள் அங்காடிகளைத் திறக்கத் துவங்கியது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவிலுள்ள வால்மார்ட்டின் 21 கடைகளின் லாபம் உலகளவில் அதன் மொத்த லாபத்தில் 0.1 விழுக்காடு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது  

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்