கொல்கத்தாவில் சீனாவின் உயர் நிலை கல்விச் சாதனைக் கண்காட்சி

2018-05-12 15:51:01
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

கொல்கத்தாவில் சீனாவின் உயர் நிலை கல்விச் சாதனைக் கண்காட்சி

2018ஆம் ஆண்டு சீனாவின் உயர் நிலை கல்விச் சாதனைக் கண்காட்சி மே 10,11 ஆகிய நாட்களில் வெற்றிகரமாக நடைபெற்றதைக் கொண்டாடும் வகையில், இந்தியாவின் கொல்கத்தாவிற்கான சீனத் துணை நிலைத் தூதரகம் 11ஆம் நாளிரவு விருந்தளித்தது. இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்த சுமார் 200 பேர் இவ்விருந்தில் கலந்து கொண்டனர்.

சீன மற்றும் இந்திய மானுடப் பண்பாட்டுத் தொடர்பை வலுப்படுத்துவது பற்றி இரு நாட்டுத் தலைவர்கள் உருவாக்கிய பொது கருத்தைச் செயல்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாக இக்கண்காட்சி நடைபெற்றது என்றும், சீனாவுக்கும், இந்தியாவின் கிழக்குப் பகுதிக்குமிடையேயான உறவை வலுப்படுத்துவதற்கு இது முக்கிய பங்காற்ற வேண்டும் என நம்புவதாகவும் சீனத் துணை நிலைத் தூதர் மா சான் வூ உரை நிகழ்த்திய போது தெரிவித்தார்.

இந்திய மக்கள் அவை உறுப்பினர் தினேஷ் திரிவேதி உள்ளிட்ட இந்தியத் தரப்பினரும் இக்கண்காட்சி வெற்றிகரமாக நடத்தப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்ததோடு, இக்கண்காட்சி இந்திய மாணவர்கள் சீனாவுக்கு சென்று கல்வி பயில்வதற்கு அரிய வாய்ப்பை வழங்குவதோடு, இரு தரப்புக்குமிடையே ஒன்றுக்கொன்று புரிந்துணர்வு மற்றும் நட்புறவை அதிகரித்துள்ளது என்றும் தெரிவித்தனர். 


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்