ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவுை ஆதரிக்கும் இலங்கை

2018-05-13 15:34:11
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இலங்கைக்கான சீனத் தூதர் சேங் சிவெய் யுவன் 11ஆம் நாள் இலங்கை அரசுத் தலைவர் மைத்ரிபாலா சிரிசேனாவுடன் சீன-இலங்கை உறவு, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் கட்டுமானம் ஆகியவை பற்றி ஆழமான முறையில் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார்.

நீண்டகாலமாக சீனா இலங்கையின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு மாபெரும் உதவிகளை வழங்கியுள்ளதற்கு சிரிசேனா நன்றி தெரிவித்தார். ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை எனும் முன்மொழிவை இலங்கை உறுதியாக ஆதரித்து, அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகர் உள்ளிட்ட முக்கிய திட்டப்பணிகளில் இரு நாட்டு ஒத்துழைப்பில் இலங்கை பெரும் கவனம் செலுத்தி வருகின்றது என்றும், மேலதிக சீன முதலீட்டை ஈர்க்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

சீன-இலங்கை நட்புறவில் சீனா பெரும் கவனம் செலுத்தி வருகிறது. இரு நாட்டுத் தலைவர்கள் உருவாக்கிய முக்கிய பொது கருத்துக்களைச் செவ்வனே செயல்படுத்தி, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் கட்டுக்கோப்புக்குள் இரு நாட்டின் இயல்பான ஒத்துழைப்பை முன்னேற்றி, இரு நாட்டு மக்களுக்கு நன்மை பயக்க வேண்டும் என சீனா விரும்புவதாக சேங் சிவெய் யுவன் தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்