பன்முக அமலாக்கத்தில் நுழையும் சீன-பாகிஸ்தான் திட்டப்பணி

வான்மதி 2018-05-15 11:11:52
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பன்முக அமலாக்கத்தில் நுழையும் சீன-பாகிஸ்தான் திட்டப்பணி

மதியரி-லஹுர் இடையேயான உயர் அழுத்த மின்னோட்டத் திட்டப்பணிக்கான ஆவணங்களில் சீனத் தேசிய மின் இணைத்தொகுதி நிறுவனம் 14ஆம் நாள் பாகிஸ்தான் அரசுடன் கையொப்பமிட்டது. சீன-பாகிஸ்தான் பொருளாதார மண்டலக் கட்டுமானத்தில் முன்னுரிமையுடன் கூடிய இத்திட்டப்பணி விரைவில் பன்முக அலமாக்கக் கட்டத்தில் நுழைவதை இது காட்டுகிறது.

மொத்தம் 878 கிலோமீட்டர் நீளமுடைய மின்னோட்டத் திட்டப்பணி, 2021ஆம் ஆண்டின் முற்பாதியில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான மொத்த முதலீடு 165.8 கோடி அமெரிக்க டாலராகும்.

பாகிஸ்தான் மையப் பகுதியின் மின்சாரப் பற்றாக்குறையைத் தணிவு செய்து, மின்சாரப் பிணையத்தின் கட்டமைப்பு மற்றும் தரத்தை மேம்படுத்துவதற்கு முக்கியத்துவம் வாய்ந்த இத்திட்டப்பணி 7000 வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும் என்று கருதப்படுகிறது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்