நேபாளத்தில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஒன்றிணைப்பு

வான்மதி 2018-05-18 09:59:17
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

நேபாளத்தில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஒன்றிணைப்பு

நேபாளக் கம்யூனிஸ்ட் கட்சியான ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்டும், மற்றொரு நேபாளக் கம்யூனிஸ்ட் கட்சியான மாவ்யிஸ்ட் மையமும், 17ஆம் நாள் காத்மாண்டுவில் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில், அதிகாரப்பூர்வ ஒன்றிணைப்பையும் புதிய கம்யூனிஸ்ட் கட்சியின் தொடக்கத்தையும் தெரிவித்தன.

நேபாள செய்தி ஊடகம் வெளியிட்ட தகவலின்படி, புதிதாக உருவாக்கப்பட்ட நேபாளக் கம்யூனஸ்ட் கட்சி நேபாள தேர்தல் ஆணையத்திடம் புதிய விண்ணப்பத்தை வழங்கியுள்ளது. முன்பிருந்த இரு கட்சிகளின் தலைவர்களான ஓலி மற்றும் பிரசாண்டா ஆகியோர் புதிய கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டுத் தலைவர்களாகப் பதவியேற்க உள்ளனர்.

செய்தியாளர் கூட்டத்தில் அவர்கள் முறையே உரை நிகழ்த்தினர். நேபாளக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டிப்பான முறையில் ஊழலை ஒழித்து, நாட்டின் செழுமைக்கு வழிகாட்டும் என்று அவர்கள் ஒருமனதாகத் தெரிவித்தனர்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்