இந்திய இருப்புப்பாதைத்துறையில் 10,000 பாதுகாப்புப் பணியாளர் சேர்க்கை

வாணி 2018-05-23 15:51:56
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

நாட்டின் பரந்த இருப்புப்பாதை வலைப்பின்னலைப் பாதுகாக்கும் வகையில், கிட்டத்தட்ட 10 ஆயிரம் பாதுகாப்புப் பணியாளர்களை நியமிக்க இந்திய இரயில்வே முடிவு செய்துள்ளது.

இப்பணியிடங்களுக்காக இணையவழி விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பை இந்திய இருப்புப் பாதை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள மொத்தப் பணியிடங்களில் 8619 பணியிடங்கள் காவலர் பதவிக்கும், 1120 பணியிடங்கள் உதவி ஆய்வாளர் பதவிக்கும் உரியவையாகும்.

தொடர்புடைய புள்ளிவிபரங்களின்படி, இந்தியாவில் நாளுக்கு 9000 பயணியர் தொடர்வண்டிகள் இயங்குகின்றன. சுமார் 2 கோடியே 30 இலட்சம் மக்கள் தொடர்வண்டி மூலம் பயணம் மேற்கொள்கின்றனர்.  

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்