இந்தியாவில் நிபா வைரஸின் தாக்குதலினால் 11 பேர் பலி

வான்மதி 2018-05-23 16:59:30
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அண்மையில் தென் இந்தியாவின் கேளரா மாநிலத்தில் பரவி வரும் நிபா வைரஸின் பாதிப்பினால் 11 பேர் உயிரிழந்தனர் என்று உள்ளூர் செய்தி ஊடகம் 23ஆம் நாள் தகவல் வெளியிட்டது.

இந்நிலையில் இந்த நோய்ப் பரவலைத் தடுக்கும் வகையில் இயன்ற அளவில் உதவியளிக்கத் தயாராக உள்ளது என்று உலக சுகாதார அமைப்பு 22ஆம் நாள் தெரிவித்துள்ளது.

பழந்தின்னி வௌவால் மூலம் பரவி வரும் நிபா வைரஸ், மனிதருக்கும் கால்நடைகளுக்கும், மூளை அழற்சி, சுவாசக்குழாய் தொடர்பான கடுமையான நோய்கள் உள்ளிட்ட பாதிப்பை ஏற்படுத்தும். தற்போது வரை இந்நோய்க்கு எதிரான பயனுள்ள சிகிச்சை முறை மற்றும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்