அமெரிக்காவின் சங்க வரி கொள்கைக்கு இந்தியாவின் எதிர்ப்பு

தேன்மொழி 2018-05-24 15:24:05
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இறக்குமதி செய்யப்படும் உருக்கு மற்றும் அலுமினியத் தயாரிப்புகளின் மீது அதிகமான சங்க வரியை அமெரிக்கா வசூலிப்பது தொடர்பாக, இந்தியா மே 23-ஆம் நாள் புதன்கிழமை உலக வர்த்தக அமைப்பிடம் புகார் செய்துள்ளதாக அவ்வமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

அமெரிக்காவின் தீர்மானம், அதற்கான இந்தியாவின் உருக்கு மற்றும் அலுமினிய ஏற்றுமதியைப் பாதிக்கும் அதேவேளையில், உலக வர்த்தக விதிகளையும் மீறியுள்ளது என்றும் இந்தியா கருதுகின்றது.

இந்நிலைமையில், உலக வர்த்த்க அமைப்பின் சர்ச்சை தீர்வு இயக்கமுறைக்கு இணங்க, இந்தியா அமெரிக்காவுடனான கலந்தாய்வை மேற்கொள்ள முயன்று வருகின்றது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்