சீன-பாகிஸ்தான் உயர் வேக நெடுஞ்சாலையின் ஒரு பகுதி திறப்பு விழா

பூங்கோதை 2018-05-27 15:23:44
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன-பாகிஸ்தான் உயர் வேக நெடுஞ்சாலையின் ஒரு பகுதி திறப்பு விழா

சீன-பாகிஸ்தான் பொருளாதார மண்டலத்தைச் சேர்ந்த மிகப் பெரிய போக்குவரத்து அடிப்படை வசதி திட்டப்பணியான பெஷாவர்-கராச்சி உயர் வேக நெடுஞ்சாலையின் சுக்குர்-முல்தான் பகுதி முன்னதாகவே போக்குவரத்துக்கு திறந்து விடப்படும் விழா மே 26ஆம் நாள் நடைபெற்றது. பாகிஸ்தான் தலைமையமைச்சர் ஷாஹித் ககான் அபாசி, பாகிஸ்தான் மத்திய மற்றும் உள்ளூர் அரசுகளின் அதிகாரிகள், பாகிஸ்தானுக்கான சீனத் தூதர் யௌ ஜிங் உள்ளிட்ட 2000க்கும் மேலானோர் இதில் கலந்து கொண்டனர்.

சீன-பாகிஸ்தான் உயர் வேக நெடுஞ்சாலையின் ஒரு பகுதி திறப்பு விழா

ஷாஹித் ககான் அபாசி பேசுகையில், பெஷாவர்-கராச்சி உயர் வேக நெடுஞ்சாலை மதிப்பீட்டின்படி 2019ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் முழுமையாக போக்குவரத்துக்கு திறந்து விடப்படும். இரு நாட்டுத் தொடர்பு மற்றும் பரிமாற்றத்துக்கும், பாகிஸ்தான்-சீனப் பிரதேசப் பொருளாதார வளர்ச்சிக்கும் இது முக்கியத்துவம் வாய்ந்தது என்றார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்