குய்சோவில் சீன-இந்திய ஐடி தொழிற்துறை ஒத்துழைப்பு

2018-05-28 14:39:47
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன-இந்திய தகவல் தொழில் நுட்பத் தொழிற்துறை திட்டப்பணி ஒன்று சனிக்கிழமை தென்மேற்குச் சீனாவில் அமைந்துள்ள குய்சோ மாநிலத்தில் தொடங்கப்பட்டது. இரு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை விரிவாக்குவதற்கான இன்னொரு முயற்சியாக இது கருதப்படுகிறது.

அதன்படி, குய்சோவின் தலைநகர் குய்யாங் நகரம் இந்தியாவைச் சேர்ந்த லாப நோக்கற்ற NASSCOM மற்றும் NIITஉடன் சேர்ந்து ஒரு தொகுதி ஒத்துழைப்புகளை மேற்கொள்ளும்.

2018 சீன சர்வதேச பெருந்தரவு தொழிற்துறை கண்காட்சி குய்யாங் நகரில் நடைபெற்று வருகிறது. இந்நகரம் சீனாவின் பெருந்தரவு வேலி என்று அழைக்கப்படுகிறது. கடந்த ஆண்டு பெருந்தரவுத் துறையில் அதன் வருமானம் 1280 கோடி அமெரிக்க டாலராகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்