மும்பையில் பலத்த மழை – விமான, ரயில் சேவை பாதிப்பு

வாணி 2018-06-10 16:29:45
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இந்தியாவின் நிதி தலைநகர் என அழைக்கப்படும் மும்பையில் சனிக்கிழமை பெய்த பலத்த மழையால் விமான சேவை மற்றும் உள்ளூர் ரயில் சேவை கடுமையாக பாதிப்படைந்தது.

விமானத் துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், மும்பை விமான நிலையம் கடுமையாகப் பாதிப்படைந்தது. 12 சர்வதேச விமானங்களும், 10 உள்நாட்டு விமானங்களும் காலதமாதமாகவே வந்தடைந்தன. 2 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன என்று தெரிவித்தார். அதேபோல் மும்பையின் தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கியுள்ளதால் சாலையில் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்தே சென்றன.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்