சீன - இந்திய உறவுக்கு 5 முன்மொழிவுகள் – சீனத் தூதர்

இலக்கியா 2018-06-19 16:28:52
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன - இந்திய உறவுக்கு 5 முன்மொழிவுகள் – சீனத் தூதர்

சீனா, இந்தியா ஆகிய நாடுகளின் உறவை மேலும் முன்னேற்றும் வகையில் 5 முன் மொழிவுகளை இந்தியாவுக்கான சீனத்தூதர் லுவோ ஜாவ்குய் (Luo Zhao Hui) திங்கள்கிழமை முன் வைத்தார். ஆங்கிலத்தில் 5 சி-க்கள் என அழைக்கப்படும் தகவல்-பரிமாற்றம், ஒத்துழைப்பு, தொடர்பு, சமநிலை மற்றும் கட்டுப்பாடு ஆகிய 5 முன்மொழிவுகளை, கருத்தரங்கு ஒன்றில் பேசிய போது அவர் தெரிவித்துள்ளார்.

‘வூகானுக்கு அப்பால் – சீன-இந்திய உறவு வேகமாகவும் நெடிய தொலைவும் எப்படிச் செல்லும்’ என்பது கருத்தரங்கின் தலைப்பாகும். அவர் கூறுகையில், இருதரப்பிலும் உள்ள அரசின் மூத்த அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள் மற்றும் சட்ட இயற்றுநர்கள் ஆகியோரிடையேயான பரிமாற்றத்தை வலுப்படுத்துவது அவசியம். ஏற்கெனவே உள்ள பல பரிமாற்ற முறைமைகளை முழுமையாகச் செயல்படுத்தி யுக்தி ரீதியிலான பரிமாற்றத்தையும், பரஸ்பர புரிதலையும் அதிகரிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

வர்த்தகம் குறித்து கூறும்போது, வர்த்தகத்தை விரிவுபடுத்தும் வகையில் ‘பிராந்திய வர்த்தக ஏற்பாடு’ தொடர்பாக இந்தியாவுடன் ஆலோசிக்க சீனா விரும்புகிறது. தொழில்நுட்பப் பூங்கா மற்றும் புல்லட் ரயில் உள்ளிட்ட முக்கியமான திட்டங்களில்  பொருளாதார ஒத்துழைப்பு மேற்கொள்வதை சீனா ஊக்குவிக்க வாய்ப்புள்ளது என்றார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்