இலங்கை அன்னிய வருவாயில் சுற்றுலாத் துறை 2ஆம் இடம்

நாதன் 2018-06-20 11:19:39
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இலங்கை ஈட்டி வரும் அன்னிய செலாவணி வருவாயில், சுற்றுலாத் துறை 2ஆம் இடத்தைப் பிடித்துள்ளது. இந்த இடத்தில் 2010முதல் கடந்த 8 ஆண்டுகளாக ஆடை தயாரிப்புத் துறை இருந்து வந்தது என்று அந்நாட்டு அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட புள்ளிவிபரத்தில் தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் மட்டும் சுற்றுலாத் துறை ஈட்டிய வருமானம் 45.8 கோடி டாலர். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 12.7 விழுக்காடு அதிகம். இதே காலத்தில் ஆடை தயாரிப்புத் துறை ஈட்டிய வருமானம் 43.48 கோடி அமெரிக்க டாலாராகும்.

இவ்வாண்டு இறுதிக்குள் சுற்றுலாத் துறையின் வருமானம் 400 கோடி டாலரைத் தாண்டும் என்று சுற்றுலாத் துறை நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்