அமெரிக்க தயாரிப்புப் பொருட்கள் மீதான வரியை அதிகரிக்கும் இந்தியா

தேன்மொழி 2018-06-22 09:44:16
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஆகஸ்ட் 4-ஆம் நாள் தொடங்கி, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில வேளாண் பொருட்கள் மற்றும் எஃகு பொருட்கள் மீதான வரியை அதிகரிக்க இந்தியா முடிவு செய்துள்ளது. இந்தியாவின் உருக்கு மற்றும் அலுமியப் பொருட்கள் மீது இறக்குமதி வரியை அமெரிக்கா உயர்த்தியுள்ளதற்குப் பதிலடியாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று இந்திய அரசின் அதிகாரப்பூர்வ தகவல்களை மேற்கோள் காட்டி அந்நாட்டு ஊடகங்கள் 21-ஆம் நாள் செய்தி வெளியிட்டுள்ளன.

30 அமெரிக்கத் தயாரிப்புப் பொருட்கள் மீதான சுங்க விரியை அதிகரிக்கும் பட்டியலை இந்தியா கடந்த வாரத்தில் உலக வர்த்தக அமைப்பிடம் ஒப்படைத்தது. இப்பட்டியலில், கொண்டைக்கடலை, பயற்றங்காய், ஆப்பிள், பேரிப்பழம் உள்ளிட்ட வேளாண் பொருட்களும், மரைவில்லை, மரையாணி உள்ளிட்ட இரும்புருக்குப் பொருட்களும் இடம்பெறுகின்றன என்று தெரிய வருகின்றது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்