ஆப்கான் அரசியல் வளர்ச்சிப் போக்கில் ஆக்கப்பூர்வ அறிகுறி

வான்மதி 2018-06-27 10:56:28
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஆப்கான் அரசியல் வளர்ச்சிப் போக்கில் ஆக்கப்பூர்வ அறிகுறி

ஐ.நா. தலைமைச் செயலாளரின் ஆப்கான் விவகாரத்துக்கான சிறப்பு பிரதிநிதி தடமிட்சி யமமொதொ 26ஆம் நாள் ஐ.நா. பாதுகாப்பவையில் ஆப்கான் நிலைமை பற்றி பேசிய போது, ஆப்கான் அரசியல் வளர்ச்சிப் போக்கு ஆக்கப்பூர்வமாக முன்னேறி வருகிறது என்று தெரிவித்தார்.

ஆப்கான் தேசிய ஒற்றுமை அரசு கடந்த பிப்ரவரியில் முன்வைத்த முன்நிபந்தனையில்லாத அமைதிப் பேச்சுவார்த்தை, அந்நாட்டின் அமைதி வளர்ச்சிப் போக்கை நனவாக்குவதற்கு புதிய சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. மேலும் ஆப்கானில் வரும் அக்டோபரில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்காகவும் அடுத்த வசந்தகாலத்தில் நடைபெறும் அரசுத்தலைவர் தேர்தலுக்காகவும் 70 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் பதிவு செய்துள்ளனர் என்று அவர் கூறினார்.

இதனிடையே, ஆப்கான் அரசுடன் தலிபான் மீண்டும் போரிடத் துவங்கிய செயலுக்கு வருத்தமும், ஆப்கானின் பெரும்பாலான பகுதிகளில் ஏற்பட்ட வறட்சி குறித்து கவலையும் அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்