இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கான ஐ.நா கூர்நோக்காளர் குழுவின் புதிய தலைவர் நியமித்தல்

வாணி 2018-07-04 15:51:09
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

உருகுவேயைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் ஜோஸ் எடடியோ அல்கெய்னை இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கான ஐ.நா கூர்நோக்காளர் குழுவின் புதிய தலைவராக நியமிப்பதாக ஐ.நா பொதுச் செயலாளர் குட்ரேஸ் செவ்வாய்கிழமை அறிவித்தார்.

இவ்வாண்டு ஜுலை திங்களில் பணி ஓய்வு பெறும் ஸ்வீடன் நாட்டவர் குஸ்தாப் ரொடினுக்குப் பதிலாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

1977ஆம் ஆண்டு உருகுவே ராணுவத்தில் சேர்ந்த அல்கெயன் சிறப்பாகப் பங்காற்றினார். 2015 முதல் 2018 வரை, அந்நாட்டின் ராணுவப்படையின் தேசிய சுகாதார சேவையின் இயக்குநராகவும் பதவி வகித்துள்ளார்.(படம், ஐ.நா இணையதளம்)


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்