இந்திய தேசிய பாதுகாப்பு கல்லூரியில் சீனத் தூதர் உரை

வான்மதி 2018-07-13 16:04:17
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இந்திய தேதிய பாதுகாப்பு கல்லூரியில் சீனத் தூதர் உரை

இந்தியாவுக்கான சீனத் தூதர் லுவோ சாவ்ஹுய் அழைப்பின் பேரில் ஜுலை 12ஆம் நாள் இந்திய தேசிய பாதுகாப்புக் கல்லூரியில் உரை நிகழ்த்தினார். சீன-இந்திய உறவு, சீனாவின் வளர்ச்சி, சீனாவின் தூதாண்மைக் கொள்கை உள்ளிட்ட அம்சங்கள் குறித்தும் அவர் இக்கல்லூரியின் ஆசிரியர் மற்றும் மாணவர்களுடன் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார்.

பல நிலைகளில் வளர்ந்து வரும் சிக்கலான இருநாட்டு உறவின் மீது சிறப்பான கவனம் வேண்டும். மேலும் முக்கியமான வளர்ச்சிக் கட்டத்தில் இருக்கும் இருநாடுகளுக்கும், சீரான வெளிப்புறச் சூழல் தேவைப்படுகிறது. நெடுநோக்கு திட்டங்களின் இணைப்பும் ஆட்சிபுரியும் அனுபவங்களின் பகிர்வும் அவசியம். உலகமயமாக்கல் எதிர்ப்பு மற்றும் வர்த்தகப் பாதுகாப்புவாதம் தலைதூக்கும் பின்னணியில், பெரிய வளரும் நாடுகளான சீனாவும் இந்தியாவும் தங்களது நிலைப்பாடுகளை ஒருங்கிணைத்து, வளர்ந்த நாடுகளுடனான உறவைக் கையாளும் அதேவேளை இருதரப்பு உறவையும் நன்றாக ஆராய வேண்டும் என்று லுவோ சாவ்ஹுய் தனது உரையில் தெரிவித்தார்.

அமெரிக்கா தொடுத்த வர்த்தகப் போர் பற்றி கூறுகையில், சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் மட்டுமல்ல, இந்தியா உள்ளிட்ட பன்னாட்டுச் சமூகத்துக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலும் எதிரெதிர் நிலையை இது உண்டாக்கியுள்ளது. விதிமுறையை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச வர்த்தக அமைப்பு முறையை உருவாக்கிப் பேணிக்காக்கும் வகையில் பல்வேறு நாடுகள் ஒத்துழைத்து பாடுபட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்