2019 பொதுத் தேர்தலில் ராகுல் காந்தி தலைமை அமைச்சர் வேட்பாளர்

2018-07-23 16:11:59
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இந்தியாவில் 2019ஆம் ஆண்டு நடைபெற உள்ள பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தலைமை அமைச்சர் வேட்பாளராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று அக்கட்சி ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியில் முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட காங்கிரஸ் செயற்குழுவின் கூட்டத்துக்குப் பின்னர் இந்த அறிவுப்பு வெளியானது.

இது குறித்து கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுர்ஜேவாலா கூறுகையில், பொதுவாக, காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருப்பவரே, தலைமை அமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார். அது போலவே, எங்கள் தலைவரை முன்னிறுத்தி பொதுத் தேர்தலை எதிர்கொள்வோம் என்று தெரிவித்தார்.

மேலும், தேர்தலின்போது பிற கட்சிகளுடன் கூட்டணி வைப்பது குறித்து முடிவெடுக்கும் அதிகாரமும் ராகுலுக்கு வழங்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தி  கூறும்போது கூட்டணி குறித்து முடிவெடுக்க ஒரு குழு அமைக்கப்படும் என்றார்.

 

 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்