சுற்றுலாவுக்கு ஏதுவற்ற காலங்களில் பயணிகள் வரத்தை அதிகரிக்க இலங்கை திட்டம்

வாணி 2018-07-25 16:17:53
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இலங்கையில், சுற்றுலாவுக்கு ஏதுவற்ற காலங்களிலும், பயணிகளின் வரத்தை

அதிகரிக்கும வகையில், சீனா, இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் மிகப் பெரிய அளவில், இலங்கை சுற்றுலாத் துறை, விளம்பரம் செய்ய உள்ளது என்று உள்ளூர் ஊடகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.


முதலாவதாக, குளிர்காலத்துக்கு முன்பு செப்டம்பர் முதல் நவம்பர் வரையில்

விளம்பரம் செய்யப்படும் என்று சுற்றுலாத் துறை அமைச்சர் ஜான் அமரதுங்கா

தெரிவித்தார். இவ்விளம்பரத்தின் ஒரு பகுதியாக செப்டம்பர் 1 முதல் நவம்பர் 30 வரை இலங்கையில் பயணம் செய்பவர்களுக்கு சிறப்பு சலுகை வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.


சமூக ஊடகம், பத்திரிகை மற்றும் டிஜிட்டல் ஆகியவற்றின் வழியில்

விளம்பரம் செய்வதற்கான ஏலத்தில் பங்கெடுக்க விரும்பும் சுற்றுலா நிறுவனங்களுக்கு அந்நாட்டு சுற்றுலாத்துறை அழைப்பு விடுத்துள்ளது. 

இந்த விளம்பர யுக்தி வெற்றிபெறும் பட்சத்தில் ஆண்டுக்கு ஒருமுறை இதேபோன்று விளம்பரம் செய்யப்படும். மேலும், மார்ச் முதல் ஜூலை வரையிலான பருவகால சுற்றுலாவுக்கும் இதேபோன்ற யுக்தி கடைப்பிடிக்கப்படும் என்று அமரதுங்கா தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்