பாகிஸ்தான் டெஹ்லிக்-எ-இந்சாப் கட்சி பெரும்பான்மை வெற்றி

வாணி 2018-07-28 18:32:05
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கையை அந்நாட்டின் தேர்தல் ஆணையம் 28ஆம் நாள் வெளியிட்டுள்ளது. அதன்படி, பாகிஸ்தான் டெஹ்லிக்-எ-இந்சாப் கட்சி பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று 115 இடங்களை வென்றது.

முன்னாள் ஆளும் கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் பிரிவு நாடாளுமன்றத்தில் 64 இடங்களைப் பெற்று இரண்டாம் இடம் வகிக்கின்றது.

டெஹ்லிக்-எ-இந்சாப் கட்சியின் தலைவர் இம்ரான் ஹான் 26ஆம் நாள் பிற்பகல் செய்தியாளர் கூட்டத்தில் தனது கட்சியின் வெற்றியை அறிவித்து பாகிஸ்தானின் புதிய அரசை உருவாக்கத் தயாராக உள்ளதாகத் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்