சீனா-நேபாளம் இடையே மக்களின் வாழ்க்கையில் கவனத்தைக் குவிக்கும் அரசு சாரா ஒத்துழைப்பு

மதியழகன் 2018-07-30 19:07:31
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனா-நேபாளம் இடையே மக்களின் வாழ்க்கையில் கவனத்தைக் குவிக்கும் அரசு சாரா ஒத்துழைப்பு

சீனா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளின் சமூக அமைப்புகளிடையே மக்கள் வாழ்க்கை தொடர்பான திட்டங்களின் இணைப்புக் கூட்டம், ஜுலை 29ஆம் நாள் காலை நேபாளத்தில் நடைபெற்றது. சீன அரசு சாரா அமைப்புகளின் சர்வதேசப் பரிமாற்றச் சங்கமும், நேபாள சமூக நலன் ஆணையமும் இந்த கூட்டத்தை கூட்டாக நடத்தின. இக்கூட்டத்தில், சீனாவின் 25 சமூக அமைப்புகளும் நேபாளத்தின் 34 சமூக அமைப்புகளும், கல்வி, வறுமை நிவாரணம், மருத்துவம், பேரிடர் தடுப்பு மற்றும் மீட்புதவி ஆகிய துறைகளிலான ஒத்துழைப்புகள் குறித்து இணைப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது.

சீன அரசு சாரா அமைப்புகளின் சர்வதேசப் பரிமாற்ற சங்கத்தின் துணை தலைமைச் செயலாளர் ட்சு ருய் இக்கூட்டத்தில் உரை நிகழ்த்துகையில், சீனா மற்றும் நேபாளத்தின் சமூக அமைப்புகளுக்கிடையே மக்களின் வாழ்க்கைத் திட்டங்கள் குறித்து பெருமளவிலான ஒத்துழைப்பு மேற்கொள்வது இதுவே முதன்முறை ஆகும் என்றார். மேலும் அவர் கூறியதாவது:

கடந்த சில ஆண்டுகளில், இரு நாடுகளின் பொருளாதார மற்றும் சமூகம் விரைவாக வளர்ந்து வருவதோடு, இரு நாடுகளின் சமூக அமைப்புகளிடையேயான பரிமாற்றம் அதிகரித்து வருகிறது. வறுமை நிவாரணம், கல்வி, பேரிடர் மீட்புதவி, மனித்த் தொடர்பு உள்ளிட்ட துறைகளில் பயனுள்ள நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. இது,  இரு நாடுகளுக்கிடையே அரசு சாரா பரிமாற்றங்களில் புதிய அம்சமாகும் என்று தெரிவித்தார்.

நேபாளத்தின் மகளிர், குழந்தை, சமூக நலத் துறை அமைச்சர் தாம் மாயா தாப்பா பேசுகையில்:

சீன-நேபாள உறவுக்கு நீண்டகால வரலாறு உண்டு. நமது உறவில், அரசு சார் பரிமாற்றம் மட்டுமல்லாமல், அரசு சாரா பரிமாற்றமும் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது என்று தெரிவித்தார்.

அன்று நடைபெற்ற திட்டங்களின் இணைப்புக் கூட்டத்தில், கல்வி, சுகாதாரம், வேளாண்மை, மகளிர் மற்றும் இளைஞர்களுக்கான வேலைப் பயிற்சி உள்ளிட்ட மக்கள் வாழ்க்கை தொடர்பான பல துறைகளில் ஒத்துழைப்புக்கும் விருப்பம் தெரிவிக்கப்பட்டது. மேலும், இருதரப்புக்கிடையில், 13 ஒத்துழைப்பு உடன்படிக்கைகள் மற்றும் குறிப்பாணைகள் கையெழுத்தாகியுள்ளன.

சீனாவின் சமூக அமைப்புகளுடனான ஒத்துழைப்பு குறித்து, நேபாளத்தின் ஆர்னிகா சொசைட்டி அமைப்பின் தலைவர் சர்போட்டாம் ஷரிஸ்தா கூறியதாவது:

சீனாவின் எந்த அமைப்புடன் ஒத்துழைப்பு மேற்கொண்டாலும், நேபாள மக்கள், பயன் பெறுவார்கள். அதேசமயத்தில், இதன் மூலம் அரசு சாரா நட்புறவு வலுப்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டார்.

சீன அரசு சாரா அமைப்புகளின் சர்வதேசப் பரிமாற்றச் சங்கத்தின் ஆலோசகர் வாங் யாஜுன் அன்று உரையாற்றியபோது:

சீனா மற்றும் நேபாளத்தின் சமூக அமைப்புகள், இணைப்புத் திட்டத்தை நன்றாக செயல்படுத்தி வருகின்றன என்றும்,  ஒவ்வொரு திட்டமும், இரு நாட்டு மக்களின் நட்புப் பரிமாற்றத்தின் சிறந்த திட்டமாகும் என்றும் கூறினார்.

 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்