சீன-பாகிஸ்தான் பொருளாதாரப் பாதைக்கு ஆதரவு

சிவகாமி 2018-07-31 10:56:54
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன-பாகிஸ்தான் பொருளாதாரப் பாதையின் ஆதரவு

பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியின் தலைவர் இம்ரான் கானும் பாகிஸ்தானுக்கான சீனத் தூதர் யாவ் ஜிங்கும் இஸ்லாமாபாத்தில் 30ஆம் நாள் சந்தித்துப் பேசினர். ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் ஒத்துழைப்புக் கருத்தையும், சீன-பாகிஸ்தான் பொருளாதாரப் பாதையின் கட்டுமானத்தையும் தனது கட்சி உறுதியாக ஆதரிப்பதாக இம்ரான் கான் தெரிவித்தார்.

மேலும், சீன-பாகிஸ்தான் பொருளாதாரப் பாதை, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற முன்மொழிவின் முதல் திட்டப்பணியாகும். சீனாவுடன் இணைந்து, பாகிஸ்தானின் புதிய அரசு, இரு நாட்டு மக்களுக்கும் சிறந்த முறையில் நன்மை பயக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

பாகிஸ்தான் தேர்தல் கமிட்டி 28ஆம் நாள் வெளியிட்ட தேர்தல் முடிவின் படி, 25ஆம் நாள் நடைபெற்ற தேசிய நாடாளுமன்றத் தேர்தலில், மொத்தமுள்ள 270 தொகுதிகளில் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சி 115 தொகுதிகளில் வென்று, அதிக இடங்களை வென்ற கட்சியாக மாறியுள்ளது. 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்