சென்ட்சென்-சென்னை சரக்கு விமானச் சேவை தொடக்கம்

மதியழகன் 2018-08-06 11:35:42
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவின் சென்ட்சென் மற்றும் இந்தியாவின் சென்னை நகரங்களுக்கு இடையேயான நேரடி சரக்கு விமானச் சேவையை, எஸ்எஃப் நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை முதல்முறையாகத் தொடங்கியது.

சியோமி கைப்பேசிகளுக்கான மூலப் பொருட்களை ஏற்றிச் சென்ற சரக்கு விமானம் 5ஆம் நாள் சென்ட்செனில் இருந்து புறப்பட்டு, 5 மணி நேரங்களுக்குப் பிறகு சென்னையை அடைந்தது. இந்த மூலப் பொருட்கள், இந்தியாவில் உள்ளூர் கைப்பேசி உற்பத்தி நிறுவனங்களுக்கு விநியோகிக்கப்படும்.

தற்போது, எஸ்எப் நிறுவனத்தின் சர்வதேச விரைவு அஞ்சல் சேவை( SF Express ), அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ரஷியா, ஜப்பான், மலேசியா உள்ளிட்ட 53 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் கிடைக்கும்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்