இந்தியச் சுற்றுலா துறையின் வளர்ச்சி

பூங்கோதை 2018-08-07 10:22:25
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இந்தியச் சுற்றுலா துறையின் வளர்ச்சி

2017ஆம் ஆண்டு இந்தியாவில் பயணம் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு கோடி 40 ஆயிரத்தை எட்டியுள்ளது. இது 2016ஆம் ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட 14 விழுக்காடு அதிகமாகும். அதே வேளையில், சுற்றுலா மூலம் இந்தியா பெற்றுள்ள அந்நிய செலாவணி ஒரு லட்சத்து 77 ஆயிரம் கோடி ரூபாய் எட்டியுள்ளது என்று இந்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் ஸ்ரீ கே.ஜெ. ஆல்பென்ஸ் ஆகஸ்டு 6ஆம் நாள் தெரிவித்தார்.

செழுமையான சுற்றுலா மூலவளங்கள் இந்தியாவில் உள்ளன. இதுவரை, யுனெஸ்கோவின் உலக மரபுச் செல்வங்களின் பட்டியலில், அந்நாட்டின் 37 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கையில், இது உலகத்தின் 6வது இடத்தைப் பெற்றுள்ளது. மேலும், 2017ஆம் ஆண்டு, இந்தியாவில் பயணம் மேற்கொண்ட சீனப் பயணிகளின் எண்ணிக்கை 2 லட்சத்து 50 ஆயிரத்தை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்