கேரளாவில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு – 30 பேர் சாவு

நாதன் 2018-08-11 17:01:17
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

கேரள மாநிலத்தில் கடந்த 48 மணி நேரங்களாகப் பெய்த பலத்த மழையைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி குறைந்தது 31 பேர் உயிரிழந்தனர் என்று அரசு வட்டாரம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

உயிரிழந்தவர்கள் இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு மற்றும் எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பலரையும் காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில முதல்வர் பினராயி விஜயன்த கூறுகையில், முன்பு என்றுமே இல்லாத அளவுக்கு மாநிலத்தில் நிலைமை மிக மோசமாக உள்ளது. அணைகளில் நீரின் அளவு அதிகரித்து வருவதால் 22 அணைகளைத் திறந்து விடும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என்று தெரிவித்தார்.

இந்திய விமானப் படையும், ராணுவமும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கடும் மழை காரணமாக, ஆலப்புழை மாவட்டத்தில் நடைபெறவிருந்த படகுப் போட்டி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்