பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு: சீனர்கள் காயம்

தேன்மொழி 2018-08-12 15:25:40
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு: சீனர்கள் காயம்

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு: சீனர்கள் காயம்

தென் மேற்கு பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாநிலத்தில் சீன மக்களை ஏற்றிச்சென்ற வாகனக் குழு ஒன்றின் மீது 11-ஆம் நாள் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் மூன்று சீனர்களும் 3 உள்ளூர் பாதுகாப்புப் பணியாளர்களும் காயமுற்றனர்.

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு: சீனர்கள் காயம்

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு: சீனர்கள் காயம்

பாகிஸ்தானுக்கான சீனத் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், இத்தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ளது. பாகிஸ்தான் தரப்பு, உண்மையைக் கள ஆய்வு மேற்கொண்டு, இச்சம்பவத்துக்குக் காரணமானவருக்கு கடும் தண்டனை விதிக்க வேண்டும் என்றும், பாகிஸ்தானிலுள்ள சீன நிறுவனங்கள் மற்றும் மக்களின் பாதுகாப்பைப் பேணிக்காக்க, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பலூசிஸ்தான் விடுதலைப் படை என்ற இயக்கம், இணையத் தளத்தில் வெளியிட்ட தகவலில், இந்தக் குண்டு தாக்குதலுக்குப் பொறுப்பேற்பதாக அறிவித்தது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்