இலங்கையில் சுற்றுலாப் பாதுகாப்புக்கு 25 காவல் நிலையங்கள் திறப்பு

2018-08-13 16:58:53
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இலங்கையின் சுற்றுலாத் தலங்களில் பாதுகாப்பைப் பலப்படுத்தும் விதம், புதிதாக

25 காவல் நிலையங்கள் முக்கியமான சுற்றுலா இடங்களில் திறக்கப்படும் என்று அந்நாட்டு காவல்துறையின் ஐஜி புஜித் ஜயசுந்தரா திங்கள்கிழமை உறுதி அளித்தார்.

இலங்கை சுற்றுலா வளர்ச்சி ஆணையத்தின் தலைவர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஜயசுந்தரா கூறுகையில், இன்னும் ஒரு சில ஆண்டுகளில் அதிக அந்நிய செலாவணி ஈட்டும் துறையாக சுற்றுலாத்துறை மாறும். அதனால் சுற்றுலாப் பாதுகாப்பு என்பது இலங்கை காவல்துறையின் பிரதான முன்னுரிமை ஆகும். 

சுற்றுலா பாதுகாப்புப் பிரிவில் ஈடுபடுவர்களுக்கு புதிய சீருடை வழங்கப்படும். இது, சுற்றுலாப் பயணிகள் காவல்துறையினருடன் இணக்கமாகப் பழக வழிவகுக்கும் என்று தெரிவித்தார்.

அத்துடன், சுற்றுலா காவல் துறையினர் மொழிப் பயிற்சியின் மீது  சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். ஆங்கிலத்துக்கு அடுத்தபடியாக, சர்வதேச அளவில் பயன்படுத்தப்பட்டு வரும் சீனம், ஹிந்தி மற்றும் பிரெஞ்சு ஆகிய மொழிகளையும் அவர்கள் கண்டிப்பாகக் கற்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்