பயணிகளை ஈர்க்க அலிபாபாவுடன் இலங்கை ஒப்பந்தம்

நாதன் 2018-08-15 18:52:52
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இலங்கைக்கு அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் விதம், சீனாவின் முன்னணி இ-வணிக நிறுவனமான அலிபாபாவின் சுற்றுலா இணையதளமான ஃப்ளிக்கி-உடன் இலங்கை சுற்றுலா முன்னேற்றத் துறை ஒப்பந்தம் செய்ய உள்ளது.

இவ்வொப்பந்தம் மூலம் வாரத்துக்கு ஆயிரம் பயணிகள் என்ற இலக்கை எட்டி சுற்றுலாத் துறை மேலும் விரிவாகும் என்ற சுற்றுலாத் துறை அமைச்சர் ஜான் அமரதுங்காவின் கூற்றை மேற்கோள் காட்டி உள்ளூர் ஊடகம் செவ்வாய்க்கிழமை செய்தி வெளியிட்டது

உரிய அனுமதி பெற்ற பின் அடுத்த வாரம் அலிபாபா நிறுவனத்துடன் சுற்றுலா அமைச்சகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடும். அலிபாபாவுடன் இலங்கையின் சுப்ரீம் குளோபல் ஹோல்டிங் லிமிடெட், ஏற்கெனவே ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்நிறுவனம், இலங்கையின் சுற்றுலா முன்னேற்றத் துறையிடுன் நெருங்கிய ஒத்துழைப்பு மேற்கொண்டு சுற்றுலா திட்டத்தை அமல்படுத்தும். இது சுற்றுலாத் துறையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்