வங்காளதேசத்தின் வங்கி RMB கணக்கு தீர்க்கும் அலுவல் தொடக்கம்

தேன்மொழி 2018-08-16 14:59:53
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

வங்காளதேசத்தின் மத்திய வங்கி வெளியிட்ட புதிய கொள்கையின்படி, அந்நாட்டின் சில வங்கிகள், மத்திய வங்கியுடன் ரென் மின் பி பணபரிவர்த்தனை செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு முன், அமெரிக்க டாலர், பவுண்ட, யூரோ, ஜப்பானிய யென், கனடா டாலர் ஆகியவை, அந்நாட்டு வங்கியில் கணக்குத் தீர்க்க பயன்படுத்தப்பட்டு வரும் அன்னிய நாணய வகைகளாகும்.

தற்போது, வங்காளதேசத்தின் மிகப் பெரிய இறக்குமதி நாடு, சீனா ஆகும். இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தக நடவடிக்கையை அதிகரிக்கவும், அமெரிக்க டாலர் மீதான சார்பு மற்றும் மாற்ற விகித்ததின் தாக்கத்தைக் குறைக்கவும்,  இப்புதிய கொள்கை துணை புரியும் என்று வங்காளதேச வங்கி துறைச் சங்கத்தின் முன்னாள் தலைவர் நூல் அமின் கருத்து தெரிவித்துள்ளார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்