19 சீன, இலங்கை தம்பதிகள் இலங்கையில் திருமணம்

இலக்கியா 2018-08-17 16:22:16
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன, இலங்கை தம்பதி 19 பேர் இலங்கையில் திருமணம்

இலங்கையின் நிகோம்போ நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற மிகப் பெரிய திருமண விழாவில் 19 சீனா மற்றும் இலங்கைத் தம்பதியினர் திருமணம் செய்து கொண்டனர். இவர்களில் 12 தம்பதி சீனாவையும், 7 தம்பதி இலங்கையையும் சேர்ந்தது.

திருமணம் புரிந்த தம்பதியினர் சீன அரசுக்குச் சொந்தமான கட்டமைப்பு பொறியியல் நிறுவனத்தில் பணியாற்று வருகின்றனர். இங்கு பணியாற்றும் காலத்தில்தான், தம்பதியினர் ஒருவரை ஒருவர் சந்திதுள்ளனர். அதனால், “ஒரு மண்டலம் ஒரு பாதைக்காக நாங்கள் கூடினோம், இலங்கையில் திருமணம் செய்து கொண்டோம்” என்ற முழகத்துடன் இச்சிறப்புத் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இலங்கைக்கான சீனத் தூதரகத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரி பெங் சுன்சுயே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பெங் சுன் சுயே கூறுகையில், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை திட்டம் நம்மை எல்லாம் ஒருங்கிணைத்ததைப் போலவே, திருமணம் புரிந்து கொண்ட தம்பதியினரையும் ஒன்றிணைத்துள்ளது. புதுமணத் தம்பதிகளின் பிரகாசமான வாழ்வைப் போல சீனா-இலங்கையின் உறவும் பிரகாசிக்கும் என்பதில் உறுதியாக நம்பிக்கை கொண்டுள்ளேன் என்று அவர் தெரிவித்தார்.

இத் திருமண நிகழ்வு, இலங்கை திருமணம் செய்வதற்கான சிறந்த இடம் என்ற அந்தஸ்துக்கு மேலும் வலுவூட்டியுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்