பாகிஸ்தானின் புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழா

இலக்கியா 2018-08-21 10:10:59
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பாகிஸ்தானின் புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழா

பாகிஸ்தான் அரசுத் தலைவர் மாம்நூன் ஹுசையின் 20ஆம் நாள் அரசுத் தலைவர் மாளிகையில், புதிய அமைச்சர்களின் பதவி ஏற்பு விழாவுக்குத் தலைமை தாங்கினார். இதில் 16 அமைச்சர்கள் உறுதிமொழி கூறிப் பதவி ஏற்றனர்.

புதிதாக உருவாக்கப்பட்ட அமைச்சரவையில் மொத்தம் 16 அமைச்சர்களும் 5 தலைமையமைச்சர் ஆலோசகர்களும் உள்ளனர். நியமனத்தின்படி, ஷாஹ் மஹ்மூத் குரேஷி, புதிய வெளியுறவு அமைச்சராகப் பதவியேற்றுள்ளார். அவர் இப்பதவியை ஏற்பது இது இரண்டாவது முறையாகும். பாகிஸ்தானின் தெரீக் யீ இன்சாஃப் கட்சியின் உயர் நிலை தலைவரான அசாத் உமர், நிதித் துறை அமைச்சராகவும், பர்வேஸ் காத்தாக், தேசியப் பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் பதவி ஏற்றனர்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்