இலங்கையில் கடல்வழி பட்டுப்பாதை கட்டுமானத்துடன் தொடர்புடைய முக்கிய சின்னம்

பூங்கோதை 2018-08-21 18:45:27
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இலங்கையில் கடல்வழி பட்டுப்பாதை கட்டுமானத்துடன் தொடர்புடைய முக்கிய சின்னம்

அல்லைப்பிட்டியில், வரலாற்று நினைவுச் சின்னத்தைக் கண்டறிய சீன-இலங்கை தொல் பொருள் ஆராய்ச்சித் திட்டப்பணி ஆகஸ்டு 10ஆம் நாள் தொடங்கியது. இந்தப் பணி தற்போது முன்னேற்றம் பெற்றுள்ளது. சீனாவின் வடக்கு சொங் வம்சக் காலத்தின் பீங்கான் பொருட்களின் உடைந்த துண்டுகள் கண்டறியப்பட்டுள்ளன என்று இலங்கையின் வட பகுதியிலுள்ள யாழ்ப்பாணம் நகரில் தொல் பொருள் ஆராய்ச்சி மற்றும் தோண்டும் பணி மேற்கொண்டு வருகின்ற சீனாவின் ஷாங்காய் அருங்காட்சியகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சிக் குழு 21ஆம் நாள் தெரிவித்தது.

இலங்கையில் கடல்வழி பட்டுப்பாதை கட்டுமானத்துடன் தொடர்புடைய முக்கிய சின்னம்

இந்தப் பீங்கான் பொருட்களின் உடைந்த துண்டுகள், அப்போதைய கடல் வர்த்தகத்துடன் தொடர்புடையது. மேலும், சீன-இலங்கை பரிமாற்றத்துக்கு அல்லைப்பிட்டி முக்கிய பங்காற்றியதை இது கோடிட்டுக்காட்டியுள்ளது. தவிர, கடல்வழி பட்டுப்பாதை கட்டுமானத்துக்கான வர்த்தக நெறி மற்றும் வழிமுறைக்கான ஆய்வுக்கு இந்தப் பணி முக்கியத்துவம் வாய்ந்தது என்று இத்திட்டப்பணியின் சீனக் குழுத் தலைவர் ச்சென் ஜியெ தெரிவித்துள்ளார். 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்