மோடி-சீனத் தேசியப் பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பு

இலக்கியா 2018-08-22 09:36:30
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

மோடி-சீனத் தேசியப் பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பு

இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திர மோடியும் புதுதில்லியில் பயணம் மேற்கொண்டு வருகின்ற சீன அரசவை உறுப்பினரும், தேசியப் பாதுகாப்பு அமைச்சருமான வேய் ஃபாங் ஹேவும் 21ஆம் நாள் சந்தித்துரையாடினர். இரு தரப்பின் ராணுவப் பாதுகாப்புத் துறையிலான ஒத்துழைப்பு ஆழமாக்கப்படும். பரஸ்பர நம்பிக்கை ஊட்டும் அமைப்பு முறை உருவாக்கப்படுவதோடு, இரு நாட்டின் ராணுவ உறவு, புதிய வளர்ச்சியைப் பெறுவதற்கு, இப்பயணம் தூண்டும் என்று வேய் ஃபாங் ஹே தெரிவித்தார்.

மோடி கூறுகையில், இந்தியாவுக்கும் சீனாவுக்குமிடையே பரந்தளவிலான கூட்டு நலன்கள் உள்ளன. எல்லைப் பிரதேசங்களின் நிதான நிலையைப் பேணிக்காக்கும் வகையில், இரு நாடுகள் கைகோர்த்துக் கொண்டு ஒன்றுக்கொன்று ஆதரவளித்து, இரு தரப்பின் ராணுவப் பரிமாற்றத்தையும் ஒத்துழைப்பையும் மேலும் அதிகரிக்க வேண்டும் என்றார்.

வேய் ஃபாங் ஹே இப்பயணத்தின் போது, இந்தியத் தேசியப் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அவர்கள், இரு தரப்பின் ராணுவ உறவை வளர்ப்பது, எல்லைப் பிரதேசங்களின் பாதுகாப்பு, நிதானம் ஆகியவை குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள உள்ளனர்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்