மாலத் தீவின் வளர்ச்சி ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவுடன் தொடர்பு

இலக்கியா 2018-08-23 10:47:37
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

மாலத் தீவின் வளர்ச்சி, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கிறது என்று சீனாவுக்கான முன்னாள் மாலத் தீவின் தூதர் முகமத் ராஷித் அண்மையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மாலத் தீவு, 21ஆம் நூற்றாண்டு கடல் வழி பட்டுப்பாதையில் முக்கிய நாடாக இருக்கிறது. சீனாவும் மாலத் தீவும், ஒருமண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவின் கட்டுக்கோப்புக்குள், ஒத்துழைப்பை மேற்கொண்டு வருகின்றன. மாலத் தீவில் சீனா உதவியளித்து கட்டியமைத்த சீன-மாலத் தீவு நட்புப் பாலம் நிறைவு பெறவுள்ளது. மேலும் மால தீவு சர்வதேச விமான நிலையத்தின் திட்டப்பணி, ஹுலுமாலேவிலுள்ள காப்புறுதி வீட்டுத் திட்டப்பணி முதலியவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவை, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவின் முக்கிய சாதனைகளாகத் திகழ்கின்றன. அவை புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதோடு, மாலத் தீவின் சுற்றுலாத் துறை வளர்ச்சியையும் உறுதியாக ஊக்குவிக்கும் என்று அவர் தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்