நேபாளத்தில் “பிம்ஸ்டெக்” அமைச்சர் நிலை கூட்டம்

மதியழகன் 2018-08-30 10:23:19
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

‘பிம்ஸ்டெக்’ எனப்படும் பல்துறை தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைக்கான வங்காள விரிகுடா முன்மொழிவின் 16ஆவது அமைச்சர் நிலை கூட்டம் புதன்கிழமை நேபாளத்தில் நடைபெற்றது. நேபாள வெளியுறவு அமைச்சர் பிரதீப் குமார் ஜியவலி தலைமை தாங்கிய இக்கூட்டத்தில், இந்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங்,  இலங்கை வெளியுறவு இணை அமைச்சர் ஆர்.ஜி.சென்னயாகே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் துறைகளிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தி, பிராந்தியத்திற்குள்ள தொடர்பு, சுற்றுலா, எரியாற்றல், வேளாண்மை ஆகிய துறைகளின் வளர்ச்சியை மேம்படுத்த பல்வேறு உறுப்பு நாடுகள் கூட்டாக செயல்பட வேண்டும் என்று ஜியாவலி தெரிவித்தார்.

அமைதியான செழுமையான மற்றும் தொடர்ச்சியான வங்காள விரிகுடாவை நோக்கிச் செல்வது என்ற தலைப்பில், பிம்ஸ்டெக்கின் 4ஆவது உச்சி மாநாடு 30ஆம் நாள் வியாழக்கிழமை துவங்குகிறது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்