காத்மாண்டுவில் பிம்ஸ்டெக் உச்சி மாநாடு துவக்கம்

மதியழகன் 2018-08-31 10:21:50
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பிம்ஸ்டெக் எனப்படும் பல்துறை தொழில்நுட்பம் மற்றும் ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்மொழிவின் 4-வது உச்சி மாநாடு ஆகஸ்டு 30ஆம் நாள் பிற்பகல் நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் துவங்கியது.

நேபாளம், வங்காளதேசம், பூட்டான், இந்தியா, மியன்மார், இலங்கை, தாய்லாந்து ஆகிய 7 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டுள்ளனர். பிராந்தியத்தின் தொடர்பு மற்றும் இணைப்பு, வறுமை ஒழிப்பு, வர்த்தகம், முதலீடு, சுற்றுலா, காலநிலை மாற்றம் ஆகிய விவகாரங்கள் பற்றி அவர்கள் முக்கியமாக விவாதித்து வருகின்றனர்.

பின்னர்,“காத்மாண்டு பிரகடனம்” என்ற அறிக்கை இன்று 31ஆம் நாள் உச்சி மாநாட்டின் நிறைவு விழாவில், வெளியாக உள்ளது.

1997ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த முன்மொழிவு, தெற்காசியாவையும் தென்கிழக்காசியாவையும் உள்ளிடக்கிய பிராந்திய குழுமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்