சுற்றுலாப் பிரசாரத்தால் சீனர்கள் வருகை அதிகம் – இலங்கை

நாதன் 2018-09-05 16:18:00
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவின் பல்வேறு மாநிலங்களில் இலங்கை-சுற்றுலா தொடர்பான பிரசாரத்துக்குப் பிறகு, இலங்கையில் சுற்றுலா மேற்கொள்ளும் சீனர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று அந்நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரவித்துள்ளது.

சுற்றுலாத் துறை அமைச்சர் ஜான் அமரதுங்கா சீனா மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாத் துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இலங்கையில் பயணம் மேற்கொள்ளும் சீனர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அனைத்து வித முயற்சிகளும் எடுக்கப்படும் என்று அமரதுங்காவிடம் அதிகாரிகள் உறுதி அளித்துள்ளதாக சுற்றுலா அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் ஷேஜியாங் நகரில் சமீபத்தில் நடைபெற்ற நிங்க்போ சர்வதேச சுற்றுலாத் திருவிழாவில் இலங்கை பங்கெடுத்தது. 3 லட்சம் பேர் பங்கெடுக்கும் இந்நிகழ்வு சீனாவில் நடைபெறும் மிகப் பெரிய சுற்றுலாப் பயண நிகழ்வாகும். இந்நிகழ்வில் இலங்கை பிரதிநிதிகள் முதன்முறையாகப் பங்கேற்றனர்.

ஷேஜியாங் மாநிலத்தில் இருந்து மட்டும் ஆண்டுக்கு 60 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இலங்கையில் பயணம் மேற்கொள்கின்றனர் என்றும் அக்குறிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்