இந்தியாவில் 2-ஆவது தொழில் பூங்காவைக் கட்டும் ஹையர் நிறுவனம்

மதியழகன் 2018-09-08 14:49:49
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இந்தியாவில் தனது 2-ஆவது தொழில் பூங்காவை கட்டியமைக்கும் வகையில், ஹையர் நிறுவனமும் உத்தரப் பிரதேச மாநில அரசும் வெள்ளிக்கிழமை புரிந்துணர்வு குறிப்பணையில் கையெழுத்திட்டன.

இந்த உடன்படிக்கையின்படி, 28.6 கோடி அமெரிக்க டாலர் முதலீடு செய்யப்படும் இந்த புதிய தொழி பூங்கா, உத்தரப் பிரதேசத்தின் நவீன நொய்டா பகுதியில் இரண்டு கட்டங்களாக கட்டப்படும. முதல் கட்ட பணித்திட்டம் 2020ஆம் ஆண்டுக்குளும் 2-வது கட்டப் பணித்திட்டம் 2022ஆம் ஆண்டுக்குளும் முடிக்கப்பட்டு உற்பத்தியைத் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஹையர் தொழில் பூங்கா கட்டி முடிக்கப்பட்ட பிறகு, உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு 4,000 நேரடி வேலை வாய்ப்புகள் மற்றும் 10ஆயிரம் மறைமுக வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும், உத்தரப் பிரதேசத்தின் பொருளாதார வளர்ச்சி, மேக் இன் இந்தியா என்ற திட்டம் ஆகியவற்றை ஹையர் தொழில் பூங்கா முன்னெடுக்கும் என்றும் இம்மாநிலத்தின் முதல் அமைச்சர் யோகி அதித்யனாத் பேசினார்.

 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்