சீன-பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை

மதியழகன் 2018-09-09 09:58:10
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன-பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை

சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவுத் துறை அமைச்சருமான வாங் யீயும், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷாஹ் மஹ்மூத் குரேஷியும் சனிக்கிழமை இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்பேச்சுவார்த்தையின்போது வாங் யீ கூறுகையில்

பாகிஸ்தானின் புதிய அரசு சுமுகமாக ஆட்சிபுரிவதற்கு சீனா ஆதரவு அளிப்பதோடு, பாகிஸ்தான் தனது புதிய வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கு உதவி அளிக்கும் என்றும் சீன-பாகிஸ்தான் கூட்டுறவை புதிய கட்டத்திற்கு முன்னெடுக்க சீனா செயல்படும் என்றும் தெரிவித்தார்.

சீர்திருத்த நிகழ்ச்சி நிரலை முன்னேற்றி வரும் பாகிஸ்தான் புதிய அரசு,   பொருளாதார வளர்ச்சி, வறுமை நிவாரணம், ஊழல் எதிர்ப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் சீனாவின் அனுபவங்களைக் கற்றுக் கொண்டுப் பயன்படுத்த விரும்புகிறது. பாகிஸ்தான-சீன பொருளாதார பாதைக் கட்டுமானத்தை முக்கியமாக கொண்டு அதை முன்னெடுக்கும் என்று குரேஷி தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்