பேச்சுவார்த்தை ரத்துக்குப் பாகிஸ்தான் மனநிறைவின்மை

வாணி 2018-09-23 16:30:30
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பாகிஸ்தான் தலைமை அமைச்சர் இம்லான் கான் 22ஆம் நாள் தனது சுட்டுரைப் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு நியூயார்க்கில் நடைபெறவிருந்த இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தையை இந்தியா ரத்து செய்ததற்கு ஏமாற்றம் தெரிவித்துள்ளார். இந்த முடிவு திமிர்பிடித்த மற்றும் எதிர்மறைத் தன்மை வாய்ந்த செயலாகும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் அதே நாள் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவின் முடிவினால் இரு நாட்டுறவை மேம்படுத்தி, இப்பிரதேசத்தில் அமைதி மற்றும் வளர்ச்சியை உருவாக்கும் வாய்ப்பை இரு நாடுகள் மீண்டும் இழந்துவிடும் என்று தெரிவித்தது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்