பாகிஸ்தானில் கன்ஃபூசியஸ் வகுப்பில் சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 69ஆவது ஆண்டு கொண்டாட்ட நிகழ்ச்சி

ஜெயா 2018-09-27 10:29:48
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பாகிஸ்தானில் கன்ஃபூசியஸ் வகுப்பில் சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 69ஆவது ஆண்டு கொண்டாட்ட நிகழ்ச்சி

சீன ஊடக குழுமத்தின் ஒரு பகுதியான சீன வானொலி நிலையத்தின் சார்பில் பாகிஸ்தானில் இயங்கி வரும் கன்ஃபூசியஸ் வகுப்பில் கன்ஃபூசியஸ் கழக தினத்தின் 5ஆவது ஆண்டு நிறைவு மற்றும் சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 69ஆவது ஆண்டு நிறைவு நிகழ்ச்சி 26ஆம் நாள் நடைபெற்றது.

பாகிஸ்தானில் கன்ஃபூசியஸ் வகுப்பில் சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 69ஆவது ஆண்டு கொண்டாட்ட நிகழ்ச்சி

இந்நிகழ்வில் பாகிஸ்தானுக்கான சீன தூதர் யாவ்ஜிங் கலந்து கொண்டு, பாகிஸ்தான் குழந்தைகளின் சீன பண்பாட்டு நிகழ்ச்சிகளை வெகுவாக பாராட்டினார்.

2011ஆம் ஆண்டு, சீன வானொலி நிலையத்தின் பாகிஸ்தான் கன்ஃபூசியஸ் வகுப்பு, பாகிஸ்தானின் 3ஆவது பெரிய கல்விக் குழுமமான மில்லீனியம் ரூட்ஸ் பள்ளியுடன் ஒத்துழைப்பு மேற்கொண்டது. அதன்படி அப்பள்ளியின் துவக்க மற்றும் இடை நிலை பள்ளி மாணவர்களுக்குச் சீன மொழி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இப்பள்ளியைத் தவிர, பாகிஸ்தானில் சீன மொழி வகுப்புகள் பல பல்கலைக்கழகங்களிலும் இடைநிலை பள்ளிகளிலும் நடத்தப்படுகின்றன. சீன-பாகிஸ்தான் பொருளாதார பாதையின் வளர்ச்சியுடன், கடந்த சில ஆண்டுகளாக, பாகிஸ்தானில் சீன மொழியைப் படிப்பது மிகவும் வரவேற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்