இந்தியாவில் 8ஆவது கடன் திட்டத்திற்கு ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி அனுமதி

மதியழகன் 2018-10-04 14:29:50
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் நெடுஞ்சாலைக் கட்டுமானத்திற்கு கடன் வழங்கும் திட்டம் சமீபத்தில் புதிதாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி 3ஆம் நாள் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

இத்திட்டத்தின் மூலம், ஆந்திர மாநிலத்தில் நெடுஞ்சாலைகளின் கட்டுமானம் மற்றும் மேம்பாட்டிற்கு சுமார் 45.5 கோடி அமெரிக்க டாலர் கடன் அளிக்கப்படும். திட்டம் நிறைவு பெற்ற பிறகு, உள்ளூர் மக்கள் 20 இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு வசதியான போக்குவரக்கு இது பலன்படும்.

ஆந்திர மாநிலத்தில் இந்தத் திட்டம், ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி இந்தியாவில் செயல்படுத்தியுள்ள 8ஆவது திட்டமாகும். இந்த 8 திட்டங்களிலும், இந்தியா மொத்தம் 176.9 கோடி அமெரிக்க டாலர் கடன்களை பெற்றுள்ளது. போக்குவரத்து, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளின் கட்டுமானத்திற்கு இந்த கடன் தொகை முக்கியமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்