புனிதப் பயணிகளின் கலந்துரையாடல் கூட்டம்:இந்தியாவிலுள்ள சீனத் தூதரகம்

இலக்கியா 2018-10-13 15:22:10
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இந்தியாவிலுள்ள சீனத் தூதரகம் 12ஆம் நாள், புனித இடங்களுக்குச் செல்லும் புனிதப் பயணிகளுக்கான, கலந்துரையாடல் கூட்டத்தை முதன்முறையாக நடத்தியது. இந்திய கைலாச மானசரோவர் புனிதப் பயணச் சங்கத்தின் தலைவர் தருண் விஜய் இதில் கலந்து கொண்டார்.

இவ்வாண்டு ஏப்ரல் சீன-இந்திய தலைவர்கள், வூ ஹான் நகரில் அதிகாரப்பூர்வமற்ற சந்திப்பை நடத்திய பின், தொடர்புடைய ஒத்த கருத்துகளை இரு நாடுகளும் செயல்படுத்தி வருகின்றன. புனிதப் பயண விவகாரத்தில், இந்தியாவுடன் தொடர்ந்து ஒத்துழைத்து, இரு நாடுகளின் நட்பையும் புரிந்துணர்வையும் அதிகரிக்கச் சீனா தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளும் என்று இந்தியாவுக்கான சீனத் தூதர் லுவோ ச்சோ ஹுவெய் இக்கூட்டத்தில் தெரிவித்தார்.

புனித இடங்கள் தொலைவுப் பிரதேசத்தில் அமைந்துள்ளன. இயற்கைச் சூழல் மோசமாக இருந்த போதிலும், புனிதப் பயணிகளுக்கு, உபசரிப்பு மையம், விடுதிகள், புதிய பாதை மற்றும் பாலங்கள், சிறப்பான வழிகாட்டி, மொழிப்பெயர்ப்பு மற்றும் மருத்துவ முதலுதவி சேவை,  முதலியவற்றை சீனா வழங்கியுள்ளது என்றும் லுவோ ச்சோ ஹுவெய் குறிப்பிட்டார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்