பாகிஸ்தானுக்கான சீன தூதர்-பாகிஸ்தான் அரசுத் தலைவர் சந்திப்பு

ஜெயா 2018-10-16 09:38:07
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பாகிஸ்தானுக்கான சீன தூதர்-பாகிஸ்தான் அரசுத் தலைவர் சந்திப்பு

15ஆம் நாள், பாகிஸ்தான் ஃபிடிஐ கட்சியின் தலைவரும், அந்நாட்டு தலைமையமைச்சருமான இம்ரான் கான், சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் சர்வதேச தொடர்பு துறை அமைச்சர் சோங்தாவ்வை இஸ்லாமாபாத்தில் சந்தித்தார்.

சீன-பாகிஸ்தான் நட்பில் சீனா எப்போது கவனம் செலுத்தி வருகிறது. பாகிஸ்தானுடன் இணைந்து, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுக்கோப்புடன் சீன-பாகிஸ்தான் பொருளாதாரப் பாதைக் கட்டுமானத்தை ஆழமாக்கி, மேலும் நெருக்கமான இரு நாட்டுறவை உருவாக்க சீனா விரும்புவதாக சோங்தாவ் தெரிவித்தார்.

பாகிஸ்தானின் புதிய அரசு, சீனாவுடனான உறவை, தூதாண்மையுறவின் முதல் மற்றும் மையமான இடத்தில் வைத்துள்ளது. அதன் அடிப்படையில், இரு நாட்டுறவை வலுப்படுத்தி, பொருளாதாரப் பாதையின் கட்டுமானத்தைக் கூட்டாக முன்னேற்ற விரும்புவதாக இம்ரான் கான் தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்