இந்தியாவில் கைபேசி தயாரிப்புத் திட்டம்: ஹுவாவெய்

வாணி 2018-10-19 16:44:15
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவின் தொலைத் தொடர்பு நிறுவனமான ஹுவாவெய் அடுத்த ஆண்டு இந்தியாவில் கைபேசிகளை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது என்று இந்திய செய்தி ஊடகங்கள் வெள்ளிக்கிழமை ஹுவாவெய் நிறுவனத்தின் உலகளாவிய துணை இயக்குநர் ஜிம் சியூவின் கூற்றை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டன.

இறக்குமதி செய்யப்படும் சாதனங்களின் மீது இந்தியா 20 விழுக்காடு சுங்க வரி வசூலிப்பதன் காரணமாகவே இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று கருதப்படுகிறது.

தவிரவும், அடுத்த 2 முதல் 3 ஆண்டுகளுக்குள் இந்தியா முழுவதும் 1000 ஹுவாவெய் கடைகளைத் திறக்கும் திட்டத்தையும் ஜிம் சியூ தெரிவித்துள்ளார்.  

தற்போது ஹுவாவெயின் துணை பிராண்டான ஹானர் இந்தியாவில் இணையம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.

 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்