பாதுகாப்புக்காக இருப்புப்பாதைகளில் படைப்பு: இந்திய இரயில்வே

வாணி ​ 2018-10-25 10:48:04
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சட்டவிரோதமாக நுழைவதை தடுக்கும் நோக்கில் நாட்டிலுள்ள அனைத்து இருப்புப்பாதைகளிலும் கம்பி வேலி அமைக்க அரசுக்கு சொந்தமான இந்திய இரயில்வே திட்டமிட்டுள்ளது.

இந்து பண்டிகை விழா தசராவின் கொண்டாட்டங்களை பார்வையிட்டு வெள்ளிக்கிழமை பஞ்சாப் அமிர்தசரஸ் நகரத்தின் வடக்குப் பகுதியில் ஒரு தொடர்வண்டி மோதிய விபத்தில் 61 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து இரயில்வே காவல்துறை இதற்குப் பரிந்துரைத்துள்ளது என்று மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.

தொடர்புடைய தரவுகளின்படி, 2015ம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரையான காலத்தில் இந்தியாவில் இருப்புப்பாதையைக் கடந்து சென்ற போது, 50,000 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்