இலங்கை தலைமை அமைச்சராக ராஜபக்சே பதவியேற்பு

வான்மதி 2018-10-30 10:32:53
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இலங்கை தலைமை அமைச்சராக ராஜபக்சே பதவியேற்பு

கொழும்பிலுள்ள தலைமை அமைச்சர் அலுவலகத்தில் 29ஆம் நாள் நடைபெற்ற பதவி பிரமாண நிகழ்ச்சியில், இலங்கையின் புதிய தலைமை அமைச்சராகப் முன்னாள் அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்சே பொறுப்பேற்றுக் கொண்டார். நிகழ்ச்சியின் போது, பொருளாதார வளர்ச்சிக்காகவும் இலங்கையை இயல்பான நிலைக்குத் திரும்பச் செய்யவும் புதிய அரசு பாடுபடும் என்று அவர் தெரிவித்தார்.

இலங்கை அரசுத் தலைவர் சிறிசேனா 26ஆம் நாள் தலைமை அமைச்சர் பதவியிலிருந்து விக்ராமசிங்கேவை நீக்கியதோடு, ராஜபக்சேயை தலைமை அமைச்சராக நியமித்தார். ஆனால் இது குறித்து, விக்ராமசிங்கே கூறிய போது, தலைமை அமைச்சர் பதவியிலிருந்து விலகப் போவதில்லை என்றும், தலைமை அமைச்சரின் மாற்றம் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விடப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும், விக்ராமசிங்கே 29ஆம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் பேசுகையில், தற்போது நான் இலங்கையின் தலைமை அமைச்சர் பதவியில் இருப்பதாக மீண்டும் வலியுறுத்தினார்.

தவிரவும், இலங்கையின் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 126 பேர் விண்ணப்ப மனுவில் பெயரிட்டு, நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூடியவிரைவில் மீண்டும் கூட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக உள்ளூர் ஊடகம் செய்தி வெளியிட்டது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்